திருப்பாவை பாசுரம் 26a
(இணைப்பதிவு)
{26ம் பாசுர விளக்கத்தை பதிவு செய்யும்போது, 26 என்ற எண்ணின் மஹத்வத்தைப் பற்றி இணைப்பதிவாக பதிவிட நினைத்தேன். ஆனால், ஓரிரு சந்தேகங்கள் எழுந்தன. பின்னர் இரண்டு உபன்யாஸகர்களின் உபந்யாஸத்தில் அவர்கள் அளித்த விளக்கங்களை கேட்டபின் தெளிந்தேன். ஆகவே இன்று இதை தனியாகப் பதிவு செய்கிறேன்.}
திருப்பாவை 26ம் பாசுரம் பற்றி, அடியேன் கேட்டறிந்த ஒரு சிறிய விசேஷத்தை இங்கு பதிப்பிடுகின்றேன்.
26 ஒரு விசேஷமான எண்:
26ல் , “2” என்பது “த்வயம்" என்று சொல்லலாம்.
26ல் , “6” என்பது, “விஷ்ணு மந்த்ரம்” என்று சொல்லலாம்
2 + 6 ஐக் கூட்டினால், வருவது, “8” இது அஷ்டாக்ஷரத்தைக் குறிக்கிறது.
2 × 6 ஐப் பெருக்கினால், வருவது , “12” .
இது, த்வாதசாக்ஷரத்தை, (அல்லது த்வாதச நாமங்களைக்) குறிக்கிறது.
நாராயண மந்த்ரம் — 8 அக்ஷரங்கள்
வாஸுதேவ மந்த்ரம் — 12 அக்ஷரங்கள்
விஷ்ணு மந்த்ரம் — 6 அக்ஷரங்கள்
இந்த மூன்றும் விஷ்ணு காயத்ரியில் அடக்கம்.
மொத்தம்–26 அக்ஷரங்கள்;
*26* என்றாலே, பகவான் — எப்படி என்றால்:
1. ப்ரக்ருதி — அதாவது, உலகம். இது மாறிக்கொண்டே இருக்கும் இயல்பை உடையது. இதற்கு, மூன்று குணங்கள் – ஸத்வம், ரஜஸ், தமஸ். இவற்றில், கூடுதல் குறைதல் ஏற்படும்போது, மஹத் என்கிற தத்வம் உண்டாகிறது.
2. மஹத்.
இந்தத் தத்வத்திலிருந்து,
அஹங்காரம் — என்கிற தத்வம் பிறக்கிறது.
3. அகங்காரம்.
இது ராஜஸ அஹங்காரம், தாமஸ அஹங்காரம், ஸாத்விக அஹங்காரம், என்று மூன்று வகை.
பிறகு, பஞ்ச தன்மாத்ரங்கள்;
4. ஆகாச தன்மாத்ரம் (ஒலி)
5. வாயு தன்மாத்ரம் (காற்று)
6.தேஜஸ் தன்மாத்ரம்.(நெருப்பு)
7. ஆப: (ஜல) தன் மாத்ரம்
8. ப்ருத்வி தன் மாத்ரம் (பூமி)
ஆகாசம் – (space) இதற்கு ஓசை என்ற தன்மை இருக்கிறது.
வாயு – இதற்கு ஆகாயத்தின் தன்மையான ஓசையோடு ஸ்பரிசம் என்ற தன்மையும் (தொடு உணர்ச்சி) உண்டு. காற்று மேலே பட்டால் தொடு உணர்ச்சியால் உணர முடியும்.
தேஜஸ் – அதாவது நெருப்பு. நெருப்புக்கு ஒளி என்னும் தன்மையோடு ஆகாயத்துக்கும் வாயுவுக்கும் இருக்கும் தன்மைகளும் சேர்ந்து ஒளி, ஓசை, ஸ்பரிசம் என்னும் மூன்று தன்மைகள் இருக்கின்றன.
ஆப: (ஜலம்) – அதாவது தண்ணீர். தண்ணீருக்கு சுவை என்னும் தன்மையோடு ஒளி, ஓசை, ஸ்பரிசம் என்னும் தன்மைகளுமாக மொத்தம் நான்கு தன்மைகள் உள்ளன. இவ்வாறே,
பிருத்விக்கு அதாவது மண்ணுக்கு வாசனை என்ற தன்மையோடு ஒளி, ஓசை, ஸ்பரிசம், சுவை என்ற நான்கு தன்மைகளும் சேர்ந்து மொத்தம் ஐந்து தன்மைகள் உள்ளன. இந்த தன்மைகளையே தன்மாத்திரைகள் என்பார்கள்.
இதன் பிறகு
பஞ்ச ஞானேந்த்ரியங்கள்;
9. சரீரம்
10. கண்
11. காது
12. மூக்கு
13. நாக்கு (ஆக 5 )
பிறகு, பஞ்ச கர்மேந்த்ரியங்கள்
14. வாக்கு
15. கை
16. கால்
17. குறி
18. ஆஸனம்
(ஆக 5 )
பிறகு, (உடலின்) பஞ்சபூதங்கள்,
19. ஆகாசம்
20. காற்று
21. நெருப்பு
22. ஜலம்
23. மண்
(ஆக 5), இதனுடன்,
24. மனம்
இவை அனைத்துஹ்ம் அடங்கிய நமது உடல். 25ம் தத்துவம், அதாவது,
25. ஜீவாத்மா.
பின்னர் 26ம் தத்துவம் அந்தப் பரமனேயாவான்.
26. பகவான் அதாவது, பரமாத்மா.
விஷ்ணு காயத்ரியை ஜபித்தாலும், அஷ்டாக்ஷரம், த்வாதசாக்ஷரம், என்கிற மந்த்ரங்களை ஜபித்தாலும், 26 வது அக்ஷரமாகிய, பகவானை, உபாஸிப்பதாக ஆகிறது.
ஆகவே, மாலே மணிவண்ணா என்னும் 26ம் பாசுரம் மிகவும் விசேஷமானதாகப் பெரியோர்களால், அனுசந்திக்கப் படுகிறது.
ஆண்டாள் திருவடிகளே சரணம்,
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
அடியேன்,
Such a revealing post! The unknown fact of the importance of 26 was very insightful. Thank you so much.
ReplyDeleteThank you Bharadwaj
Delete